In Perambalur auto driver who has paytm to deal with the shortage of change

perambalur-paytm-set-in-auto_1 பெரம்பலூரில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சில்லறை தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையிலும், மத்திய அரசு அறிவித்து வரும் மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் பேடிஎம்மை அமைத்துள்ளார்.

மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் கடந்த 8 ஆம் 500 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்து புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பினர் சில்லறைக்கும், நோட்டு மாற்ற அலைந்து கொண்டுள்ளனர்.

மத்திய அரசு காகிதமில்லாத பணச்சேவையை அறிவித்து வரும் வேளையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையதில் வாடகை ஆட்டோ ஓட்டி வரும் ஓட்டுநர் துரை என்பவர் பேடிஎம் கார்டு மூலம் ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடம் பேடிஎம் வாடகையை மூலம் வசூலித்து வருகிறார்.

இதனால் அவரது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு கொடுக்க வேண்டிய சில்லறை பாக்கி பிரச்சனை தீருவதுடன் கள்ள நோட்டுகளையும் தடுக்கலாம் என்றும், வாகனத்திற்கான எரிபொருள் மற்றும் இதர குடும்ப செலவுகள் மற்றும் கொள்முதல் விவகாரங்களுக்கு மின்னணு பரிவர்த்தனை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.

இதே போன்று அரசு பேருந்துகள், இதர சில்லறை வியாபாரிகள் வணிக ரீதியாக மின்னணு பரிவார்த்தனை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என தெரிவிக்கிறார் ஆட்டோ ஓட்டுநர் துரை


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!