வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணா;வு பிரச்சார பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி ள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணார்வு பிரச்சார பேரணி இன்று பெரம்பலூர் பாலக்கரையிலிருந்து துவங்கியது.
இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் 2016-ல் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் “வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், வாக்களிக்க தயார் என்போம். எனது வாக்கை விலைக்கு விற்கமாட்டேன், ஜனநாயகக் கடமையாற்ற அனைவரும் முன்வருவோம், 1950 என்ற எண்ணிற்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறுந்தகவலாக அனுப்பி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதை உறுதி செய்வோம்” என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் மாணவ, மாணவிகள் பேரணியாகச்சென்றனனர்.
குரும்பலூர், வேப்பூர் பாராதிதாசன் பல்கலைகழக உறுப்புக் கல்லூரிகள், தனலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சாரதா மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்ற இப்பேரணி பாலக்கரையில் துவங்கி வெங்கடேசபுரம், சங்குபேட்டை, காமராஜர் வளைவு வழியாக சென்று பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை சென்று அடைந்தனர்.
இப்பேரணியில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.