In Perambalur, Awareness Meeting for Hostel wardens on behalf of Food Security

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் சார்பாக கூட்டுறவு பண்டகசாலை கிடங்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகாப்பளர்கள், தனியார் விடுதி காப்பாளர்கள், மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் விடுதிக் காப்பாளர் மற்றும் பானிபூரிக் கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சவுமியா சுந்தரி தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுமார் 100 நபர்கள் கலந்து கொண்டனர். இவ்விழிப்புணாவு கூட்டத்தில் கூட்டுறவு பண்டகசாலை கிடங்கிலிருந்து வழங்கப்படும் அனைத்து உணவுப்பொருட்களுக்கும் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஒருமாத காலத்திற்குள் அச்சிடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

விடுதி காப்பாளர்களுக்கு உணவு பொருட்களில் கலப்படம், உண்ணும் உணவு தரமுள்ளவையாக இருத்தல், காலாவாதியான உணவு பொருட்கள் பயன்படுத்தாமை, பொட்டமிலப்பட்ட எண்ணெய் வகைகளை பயன்படுத்துதல், உணவுபொட்டலத்தில் FSSAI பதிவு உhpமம் எண்; அச்சிடப்பட்ட பொருட்களை வாங்குதல், உணவுப் பொட்டலத்தில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி அச்சிடப்பட்ட பொருட்களை வாங்குதல், உணவுப்பொருட்கள் First In First Out முறையில் அடுக்கிவைக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும் உணவு தயார் செய்யப்படும் இடம் சுகாதாரமாக இருக்கவும், சமையல் செய்பவர்கள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கவும், குடிநீர் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்பட்டு அதற்கான பதிவேடுகளை பராமரிக்கவும், பார்வையாளர்கள் பதிவேடு பராமரிக்கவும், உணவுமாதிரிகள் சமைத்தவுடன் எடுத்துவைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

விடுதிகாப்பாளர்களுக்கு அனைத்து மாணவர்களுக்கும் உணவுப்பொருட்களில் அதிக நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்க்க விழிப்புணர்வு அளிக்க அறிவுறுத்தப்பட்டது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் அனைத்து உணவு நிறுவனங்களிலும் அனைத்து தனியார் மற்றும் அரசு விடுதிகள் உள்ளாக வாட்ஸ்அப் புகார் எண் ஒட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளதின் அடிப்படையில் அனைத்து விடுதி காப்பாளர்களுக்கும் வாட்ஸ்அப் எண் 9444042322 கொண்ட சுவரொட்டிகள் வழங்கப்பட்டது.

9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் நுகர்வோர்கள் புகார் அளிக்கலாம். கொடுக்கப்பட்ட புகார்களுக்கு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார் அளித்த நபருக்கு உரிய பதில் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவுச்சான்றிதழ் பற்றிய விளக்கங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் இயங்கும் நியமன அலுவலர் உணவுப் பாதுகாப்பு துறையில் 04328-224033 என்ற அலுவலக தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!