In Perambalur awareness of National Disaster Reduction Day
நாளை மறுநாள் அக் 10.ம் தேதி தேசிய பேரிடர் குறைப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பேரிடர் குறைப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் நாளை 13ந்தேதி காலை 9.30 மணியளவில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியிலுள்ள வட்டாசியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது.
வட்டாசியர் அலுவலகத்தில் துவங்கும் பேரணி காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை, பாலக்கரை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடையும்.
இதில் பள்ளி மற்றும் கல்லூரிகளைச்சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேரிடர் குறைப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொள்ள உள்ளனர்.