In Perambalur: Carrom Games winning the student, whose detail
பெரம்பலூர்: கேரம் விளையாட்டுப்போட்டிகள் இன்று காலை 9.00 மணியளவில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் 25 பள்ளிகளைச் சேர்ந்த 100 மாணவர்களும், 15 பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவிகளும் கலந்து கொண்டனர்.
இளநிலைப் பிரிவு மழலை வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலும், முதுநிலைப்பிரிவு 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் கேரம் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது.
இளநிலைப் பிரிவு மழலை வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான மாணவியர் ஒற்றையர் போட்டியில் து. செல்வ செந்தளிர் – புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி முதலிடத்தையும், ஜே. லாவண்யா – மரகதம் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியைச் சேர்ந்த மாணவி 2-ம் இடத்தையும், சு. ஆர்த்தி – அரசு ஆதிதிராவிடர் பிரைமரி பள்ளியைச் சேர்ந்த மாணவி 3-ம் இடத்தையும் பெற்றனர்.
மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான ஒற்றையர் போட்டியில் ஆ. சன்ராஜ்- புனித ஜோசப் மெட்ரிக்; பள்ளியைச் சேர்ந்த மாணவர் முதலிடத்தையும், மு. நவின் அரசு ஆதிதிராவிடர் பிரைமரி பள்ளியைச் சேர்ந்த மாணவர் 2-ம் இடத்தையும், சூரியா, அரசு ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவி .3-ம் இடத்தையும் பெற்றனர்.
மாவட்ட அளவிலான மாணவியர் இரட்டையர் போட்டியில் வு. நீரஜா, சு.டீ. ஹரினி -தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் முதலிடத்தையும், சஹானா, சுருதி -புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 2-ம் இடத்தையும், சு. துர்கா, காயத்ரி அரசு ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 3-ம் இடத்தையும் பெற்றனர்.
மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான இரட்டையர் போட்டியில் சு. சந்தீப், யு. விதிஸ் புனித ஜோசப் மெட்ரிக்; பள்ளியைச் சேர்ந்த மாணவாகள் முதலிடத்தையும், சைலேஷ், ஆ. பிரதீப் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 2-ம் இடத்தையும், சூர்யா, வினோத் குமார், அரசு ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 3-ம் இடத்தையும் பெற்றனர்.
முதுநிலைப்பிரிவு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கான மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான ஒற்றையர் போட்டியில், து. சௌமியா, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி முதலிடத்தையும்,
ஆ. சத்யா அரசு உயா;நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி 2-ம் இடத்தையும், அனிஷா கேந்திரிய வித்யாலயா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி 3-ம் இடத்தையும், பெற்றனர்.
மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான ஒற்றையர் போட்டியில் அருண்குமார், அரசு உயர்நிலைப்பள்ளி பாடாலூரைச் சேர்ந்த மாணவர் முதலிடத்தையும், அருண்குமார், அரசு ஆதிதிராவிடர் உயா;நிலைப்பள்ளி பாடாலூரைச் சோ;ந்த மாணவா; 2-ம் இடத்தையும், பிரசாந்த் அரசு உயர்நிலைப் பள்ளி வி.களத்தூரை சேர்ந்த மாணவர் 3-ம் இடத்தையும், பெற்றனர்.
மாவட்ட அளவிலான மாணவியர் இரட்டையர் போட்டியில் சு .கீதா, ஆ.சுவாதி அரசு உயர்நிலைப்பள்ளி குரும்பலூரைச் சேர்ந்த மாணவிகள் முதலிடத்தையும், து.ஜினோவா, மு. ஷெகனாஸ், புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 2-ம் இடத்தையும், சங்கீதா, ஆ. மேஷா அரசு உயர்நிலைப்பள்ளி சிறுவாச்சூரைச் சேர்ந்த மாணவிகள் 3-ம் இடத்தையும் பெற்றனர்.
மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான இரட்டையர் போட்டியில் சாந்தகுமார் ,ஆ. கலைவானன் பாடாலூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவாகள் முதலிடத்தையும், முத்துக்குமார், ஆ. மாதவன் பாடாலூர் அரசு ஆதிதிராவிடர் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவாகள் 2-ம் இடத்தையும், முத்துக்குமார், பு. விஜய் குரும்பலூர் அரசு உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 3-ம் இடத்தையும், பெற்றனர்.
மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவா;கள், மாநில அளவிலான மாவட்டங்களுக்கிடையேயான கேரம் விளையாட்டுப்போட்டிகள் அக்டோபர்-2016 மாதம் நடத்தப்பட உள்ளதால் அப்போட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர்.
29.08.2016 இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தடகளப் பயிற்றுநர் க.கோகிலா மற்றும் மாணவ, மாணவியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.