In Perambalur contribution pension plan to overturn the new pensioners protest
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மு.தங்கராசு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஓய்வு பெற்றோர் பிரிவு மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் தலைமையில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில், கடந்த 2016 ஜன.1 முதல் அமல்படுத்தும் வகையில் 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமல்படுத்ததுதல், கடந்த செப்.1 முதல் 7 சதவீதம் அகவிலைப்படி உடனே வழங்கவும், வல்லுனர் குழு அறிக்கையை உடனடியாக வெளியிடவும், புதிய பங்களிப்பு ஓய்வுதிய திடடத்தை ரத்து செய்யவும், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்குதல்,
படை வீரர்களின் வாரிசுகளுக்கு இரட்டை குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், நிர்வாகத் தீர்ப்பாயம், அமைப்பதற்கு ஆணையிடவும், புதிய மருத்துவ காப்பீட்டுத் திடடத்தின் கீழ் பயன்பாடு மறுக்கப்படும் நிலையில், கட்டாய ஓய்வுதியப் பிடித்தம் செய்வதில் இருந்து விலக்களித்து, திட்டத்தில் இருந்து விலகுவதற்கு அனுமதி அளிக்க வேண்டியும், கருவூலம், மாநிலக் கணக்காயர் துறையினால் மிகை ஓய்வூதியம் பிடித்தம் தொடர்பான தடைகளை திரும்ப பெற வேண்டியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புரவலர் என்.தேவராஜன் முன்னிலை வகித்தார். ஓய்வு ஆசிரியர்கள் எசனை வெங்கடாசலம், சீனிவாசன், முத்துசாமி, ஆலம்பாடி பெரியசாமி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். என்.செல்லப்பிள்ளை நன்றி கூறினார்.