In Perambalur district level “Khelo India” Project game, select Matches

பெரம்பலூர் : “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் , தடகளம், கையுந்துப்பந்து, இறகுப்பந்து, மேஜைப்பந்து, கபடி, டேக்வாண்டோ, பளு தூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், டென்னிஸ் ஆகிய விளையாட்டுப்போட்டிகளும் சைக்கிள் ஓட்டுதல், கூடைப்பந்து, ஹாக்கி, வில்வித்தை, ஜுடோ, மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக்ஸ்,கோ-கோ, வுஷு, கைப்பந்து, கால்பந்து ஆகிய தோ;வுப் போட்டிகளும் 06.01.2017 மற்றும் 07.01.2017 இரு நாட்கள் பெரம்பலுhh; மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகின்றது.

இன்று (06.01.17) 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவில் பெரம்பலூh; மாவட்டத்தைச் சார்ந்த 100 பள்ளிகளைச் சார்ந்த 480 மாணவர்கள், 420 மாணவிகள் என 900 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் தடகளம், கையுந்துப்பந்து, மேஜைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுப் போட்டிகளும் சைக்கிள் ஓட்டுதல், கூடைப்பந்து, ஹாக்கி, வில்வித்தை, ஜுடோ ஆகிய தோ;வுப் போட்டிகளும் நடைபெற்றது.

தடகளம் விளையாட்டுப் போட்டியில் 14 வயதிற்குபட்பட்ட பெண்களுக்கான பிhpவில் 400மீ ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், 100மீ மற்றும் 400மீ ரிலே ஓட்டப்போட்டியில் ஒய். டெல்சி (புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி), குண்டு எறிதல் போட்டியில் பி.பிரியதர்ஷினி (புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி) மாணவிகள் முதலிடத்தை பெற்றனர்.

தடகளம் விளையாட்டுப் போட்டியில் 17 வயதிற்குபட்பட்ட பெண்களுக்கான பிரிவில் 400மீ ஓட்டப் போட்டியில் ஆர். கிருத்திகா, நீளம் தாண்டுதல் போட்டியில் ஆர்.சங்கீதா, 100மீ ஓட்டப்போட்டி, 400மீ ரிலே போட்டிகளில் கே.பவானி, குண்டு எறிதல் போட்டியில் ஜி.ராஜாத்தி, ஆகிய புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடத்தை பெற்றனர்.

தடகளம் விளையாட்டுப் போட்டியில் 14 வயதிற்குபட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் 400மீ ஓட்டப்போட்டியில் ஆh;.கோபிநாத், நீளம் தாண்டுதல் போட்டியில் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த த.தமிழ்செல்வன் முதலிடத்தையும், குண்டு எறிதல் போட்டியில் த. அஜித் குமார் 100மீ ஓட்டப்போட்டியில் சி.ஆர்.மிதுன்ராஜ், 400மீ ரிலே போட்டியில் எம்.பாரத் ஆகிய மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றனர்.

தடகளம் விளையாட்டுப் போட்டியில் 17 வயதிற்குபட்பட்ட ஆண்களுக்கான பிhpவில் 400மீ ஓட்டப்போட்டியில் எஸ். விஜய்,நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெ.டேவிட் குமார், குண்டு எறிதல் போட்டியில் ஆர்.ஜெ. ஹரீஸ் 100மீ ஓட்டப்போட்டியில் சி.ஆர்.விபின் ராஜ், 400மீ ரிலே போட்டியில் எஸ்.மருதுபாண்டி ஆகிய மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.

இவ்விளையாட்டுப் போட்டிகளில் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் பெண்களுக்கான கையுந்துப்பந்து போட்டியில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடத்தை பெற்றனர். 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கையுந்துப்பந்து போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் முதலிடத்தையும் பெற்றனர்.

14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கையுந்துப்பந்து விளையாட்டுப் போட்டியில், செங்குனம் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் அணியினர் முதலிடத்தையும், 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கையுந்துப் பந்து விளையாட்டுப் போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அணியினர் முதலிடத்தையும், 14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான மேஜைப்பந்து விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் அ.கதிரவன், இரட்டையர் பிரிவில் எம். பீர்முகம்மது, அசோக் ஆகிய ஆகிய கீழபுலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சார்ந்த மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றனர். 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான மேஜைப்பந்து விளையாட்டுப் போட்டியில் ஒற்றையா; பிரிவில் ஆர்.பச்சைமுத்து, இரட்டையா; பிரிவில் ஆர். பச்சமுத்து, பி. அசோக் ஆகிய கீழபுலியூர் அரசு மேல்நிலைப் பள்ளியை சார்ந்த மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றனர்.

14 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்து தேர்வுப் போட்டியில் இ.ஐஸ்வர்யா, ஷாலினி சஞ்சனா என்ற இரு மாணவிகள் தேர்வுப் பெற்றனர். 14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்து தேர்வுப் போட்டியில் ஆர். ரிஷி, ஜெ. ஸ்ரீவந்த் என்ற இரு மாணவர்கள் தேர்வுப் பெற்றனர். 17 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்து தேர்வுப் போட்டியில் டி.சௌந்தர்யா, கே.மாம்சி என்ற இரு மாணவிகள் தேர்வுப் பெற்றனர். 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கூடைப்பந்து தேர்வுப் போட்டியில் வி.எஸ்.விபின், ஆர்.சிபி ஆகிய இரு மாணவர்கள் தேர்வுப் பெற்றனர்.

14 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான வில்வித்தை தோ;வுப் போட்டியில் ஆh;. மலா;கொடி, எஸ்.ஆயிஷா பீ, 17 வயதிற்குட்பட்ட பிரிவில் எஸ்.ஜனனி,பி. கௌசல்யா, ஆகிய மாணவிகள் தேர்வுப் பெற்றுள்ளனர். 14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான வில்வித்தை தேர்வுப் போட்டியில் என்.மெய்யன், ஆர். ஆகாஷ் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் எஸ்.நாகசரவணன்,கே.தினேஷ் ஆகிய குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் தேர்வுப் பெற்றனர்.

14 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான ஜுடோ தேர்வுப் போட்டியில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த என்.அப்சரா, அ. அன்புமொழி, 17 வயதிற்குட்பட்ட பிரிவில் ஆர். பிரியா, எம்.ராஜகுமாரி ஆகிய மாணவிகள் தேர்வுப் பெற்றனர். 14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான ஜுடோ தேர்வுப் போட்டியில் பி.ஹரிஸ்,எஸ்.விஜய் ஆகிய மாணவர்கள் தேர்வுப் பெற்றனர்.

இப்போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.350- ம், இரண்டாம் பரிசாக ரூ.250- ம், மூன்றாம் பரிசாக ரூ.150-ம் என மொத்தம் ரூ.2 இலட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுத்தொகை நாளை நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன், தடகளப் பயிற்றுநர் க.கோகிலா, டேக்வாண்டோ பயிற்றுநர் ந.தா;மராஜன், பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!