In Perambalur district, merchants set up temporary shops in commercial tax department to register Fireworks – Government Notice
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட நிர்வகாம் தெரிவித்துள்ளதாவது :
ஒவ்வொரு வருடமும் வணிகர்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் பட்டாசு கொள்முதல் செய்து தற்காலிக கடைகள் அமைத்து சில்லரை விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது. இவ்வாறு தற்காலிகமாக பட்டாசு விற்பனைக் கடைகள் அமைக்கும் வணிகர்கள் தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் 2006 விதி 38(3)(அ)-ன் கீழ் வணிகவரித்துறையில் பதிவு எண் பெற்ற பிறகே கொள்முதல் மற்றும் விற்பனை செய்யவேண்டும். மேலும் பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் தங்களது பதிவுச் சான்றினை கடைகளில் பார்வைக்கு வைக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து பட்டாசு வணிகர்களும் தங்களது கொள்முதலுக்கான பட்டியல்கள் பெற்றிருக்கவேண்டும். மேலும், வணிகர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படும் பட்டாசுகளுக்கு பட்டியல்கள் வழங்கப்பட வேண்டும். கொள்முதல் மற்றும் விற்பனை குறித்த விவரங்களை தங்களது விற்பனை இடம் அமைந்துள்ள எல்லைக்குட்பட்ட வாpவிதிப்பு வட்டத்தில் தாக்கல் செய்து அதற்குண்டான வாpயைச் செலுத்தவேண்டும்.
வணிகர்களின் நலன் கருதி தற்காலிகமாக பதிவுச்சான்று பெற ஒவ்வொரு மாவட்ட தலைமை அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி தற்காலிக பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் உதவி மையங்களை அணுகி நேரடியாக விண்ணப்பம் செய்து பதிவுச் சான்று பெற்றுக்கொள்ளலாம், என தெரிவித்துள்ளது.