In Perambalur district Rs. 10 Coin Bankers Merchants, Conductors Refuse to Buy Other District Public Suffering!

பெரம்பலூர் கடந்த சில மாதங்களாக, மாவட்டத்தில் உள்ள சிறிய, பெரிய கடைகள், மருந்து கடைகள், வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், பெட்டிக் கடைகளில் பொதுமக்கள் ரூ.10 நாணயத்தை கொடுத்து பொருட்களையோ, அல்லது பேருந்துகளில் ஏறி பயணசீட்டு பெற கொடுத்தால் வாங்க மறுத்து வருகின்றனர்.

சென்னை உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும், வியாபாரிகள் முதல் நடத்துனர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரூ.10 நாணயத்தை வாங்கவும், கொடுக்கவும் நல்ல புழக்கத்தில் இருந்து வருகிறது.

வெளியூர்களில் செல்லத்தக்க கூடிய பத்து ரூபாய் நாணயம் செல்லதது போல், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வணிகர்களும், பேருந்து நடத்துனர்களும் புறக்கணிப்பதால், அரியலூர், சேலம், தஞ்சை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் சேலம் மாவட்ட மக்கள் பெரம்பலூருக்கு வரும் போது 10 நாணயத்தால் பெரும் சிரமப்படுகின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் தெரிவித்ததாவது:

இந்திய அரசாங்கம் வெளியிட்ட நாணயத்தை அரசு மற்றும் தனியார் வங்கிகள், வணிகர்கள் பெற்றுக் கொண்டு பரிமாற்றம் செய்ய வேண்டும். வாங்க மறுப்பது அரசாங்கத்தை அவமதிக்கும் செயலாகும். அனைத்து வங்கிகள் மற்றும் வணிகர் சங்களுக்கு சுற்றிக்கை அனுப்பபட்டுள்ளது. இது குறித்து புகார் வந்தாலோ, அல்லது பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!