In Perambalur district, there are 3154 students in the adult education movement. CEO Info!

களரம்பட்டி கிராமத்தில் வயல்வௌியில் பயிலும் பெண்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில், நடப்பு கல்வி பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில், கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் வகையில், கற்போம் எழுதுவோம் இயக்கம் என்ற வயது வந்தோர் கல்வித் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் எழுத்தறிவு மையங்களில் சேர்ந்து பயின்று வருகின்ற கற்போர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச கற்றல் அடைவுகளின் அடிப்படையிலான மதிப்பீட்டு முகாம் வருகின்ற 29.07.2021 முதல் 31.07.2021 முடிய மூன்று நாட்களில் நடத்திட மாநில பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களிலும் 147 கற்போர் எழுத்தறிவு மையங்களில் மொத்தம் 3154 பேர் கற்று, எழுத்தறிவு பெற்று வருகின்றனர். எழுத்தறிவு மையங்களில் கற்கும் கற்போர்களுக்கு நேற்று முதல் குறைந்தபட்ச கற்றல் அடைவுகளின் அடிப்படையிலான மதிப்பீட்டு முகாம் துவங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. கற்போர்களின் வீடுகள் மற்றும் கற்போர்கள் பணிபுரியும் இடங்களுக்கே சென்று மதிப்பீடு செய்யப்படுகிறது. கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பது போல் கற்போர்கள் ஆர்வமாக மதிப்பீட்டு முகாம்களில் கலந்து கொண்டு அவர்களின் பெயர், உறவினர்களின் பெயர்கள், ஊரின் பெயர் மற்றும் மாவட்டத்தின் பெயர் உள்ளிட்டவற்றை வாசித்து எழுதுகின்றனர்.

இம்முகாமினை வடக்கு மாதவியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன் துவக்கி வைத்து ஆலோசனை வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட உதவி திட்ட அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் முகாமினை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!