In Perambalur district under the age of 19 and all school and college students presented tomorrow deworming tablets to remove – collector Notice

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் தெரிவித்துள்ளதாவது:

Albendazole-Tablet உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி இந்தியாவில் 1வயது முதல் 19 வயதுடைய குழந்தைகளில் 24.1 கோடி குழந்தைகள் குடற்புழு தொற்று ஏற்படக்கூடிய அபாய நிலையில் உள்ளனர். இது சராசரியாக 1 முதல் 19 வயதுள்ள குழந்தைகளில் 68 சதவீதம் ஆகும். ஆனால் உலகஅளவில் 1 முதல் 19 வயதுடைய குழந்தைகளில் 28 சதவீத குழந்தைகளே குடற்புழு தொற்று ஏற்படும் நிலையில் உள்ளனா;.

இந்நிலையை போக்கும் வகையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும கல்லூரிகளில் பயிலும் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்கமருந்து (அல்பெண்டாசோல்) நாடு முழுவதும் ஒரேநாளில் வழங்கப்படவுள்ளது. இக்குடற்புழு நீக்க மருந்து வழங்கும் நிகழ்வு நாளை (10.8.2016) நடைபெறவுள்ளது.

அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 10.08.2016 அன்று பொது சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் ஆகியதுறைகளின் மூலம் 1 முதல் 19 வயதுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்கமருந்து தரப்பட உள்ளது.

1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ½ மாத்திரை (200 மி.கி) அல்லது 5 மி.லி.மருந்து வழங்கப்படும், 2 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மாத்திரை அல்பெண்டாசோல் (400மி.கி) வழங்கப்படும்.

குழந்தைகளுக்கு இந்த குடற்புழு நீக்க மருந்து, மாத்திரைகள் கொடுப்பதின் மூலம் இரத்தசோகையை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாh; பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு குடற்புழுநீக்க மருந்து சம்மந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் வாயிலாகவும், அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கும் சம்மந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடிமையப் பணியாளர்கள் மூலமாகவும் மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

எனவே தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் குடற்புழு நீக்க மருந்து, குடற்புழு நீக்க நாள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை மாணவ-மாணவிகளிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் எடுத்துக் கூற வேண்டும்.

இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 58 ஆயிரம் குழந்தைகள் பயனடைவார்கள். எனவே, பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, தங்கள் குழந்தைகளில் பள்ளிகளில் வழங்கப்படும் குடற்புழு நீக்கமருந்தினை தவறாமல் உட்கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாளை மாத்திரை சாப்பிட விடுபட்ட குழந்தைகளுக்கு 17.8.2016 அன்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!