In Perambalur dmk parties roadblock! Speaker burn effigy of Mr. Dhanapal
பெரம்பலூரில் திமுகவினர் சாலைமறியல் ! சபாநாயகர் தனபால் கொடும்பாவி எரிப்பு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டதையும், திமுக.உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டைதக் கண்டித்தும் பெரம்பலூர் மாவட்ட திமுகவினர், திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்த அவர்கள், பெரம்பலூர் பாலக்கரையில் இன்று சுமார் 3.30 மணியளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து திமுகவினரை தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும் திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளை தள்ளிவிட்டு திமுகவினர் கோசங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். பின்னர், புதிய பேருந்து நிலையம் முன்பு சபாநாயகர் தனபாலின் உருவ பொம்மையை எரித்தனர். அப்போது போலீசார் தடுக்க முயன்றும் முடியாமல் போனது. இதனால் அவ்வழியே வாகனங்கள் திருச்சி, துறையூர் நாமக்கல், சேலம் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நின்றது. சுமார் 200க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.