In Perambalur Doctors strike in protest against the formation of a the National Medical Commission

kalaimalar.com

kalaimalar.com

தேசிய மருத்துவ கமிசன் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூரில் மருத்துவர்கள் அமைதி போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுலகம் முன்பு, தேசிய மருத்துவ கமிசன் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மருத்துவர்கள் அமைதி போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில், தற்போது நடைமுறையில் உள்ள மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா ஒரு சுய அதிகாரம் கொண்டாதகவும், மாநில வாரியாக பிரதிநிதித்துவம் செய்யும் மருத்துவதுறையினர்கள் இருந்து வருகிறார்கள். இவர்கள் முறைப்படியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். மேலும், இந்த அமைப்பு மருத்துவர்கள், அரசு செய்யும், குறைகளை சுட்டிக்காட்டவும், தண்டிப்துடன் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கும் அமைப்பாக உள்ளது. ஆனால், இன்று மத்திய கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவ கமிசன் என்ற புதிய அமைப்பில், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், பிரபலமானவர்களை அடிப்படை உறுப்பினர்களாக பதிவு செய்து நடத்த திட்டமிட்டுள்ளதை இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த மருத்துவர்கள் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தனர். மேலும், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் மருத்துவு இழப்பீட்டுத் தொகைக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும், மருத்துமனை அமைப்புச் சட்டத்தில் உரிமம் முறையை ரத்து செய்ய வேண்டும், தனிநபர் கிளினிக்கிற்கு, விலக்கு அளிக்க வேண்டும், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதற்கு மட்டுமே தண்டனை வழங்க வேண்டும், பதிவேடுகள் நிரப்பபடாததற்கு தண்டணை வழங்க கூடாது. பாரம்பரிய மற்றும், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள், ஆங்கில மருந்துகளை பரிந்துரைக்க தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேராட்டம் நடத்தினர்.

அச்சங்கத்தின் தலைவர் செங்குட்டுவன், தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக செயலாளர் கதிவரன் வரவேற்றார். ராஜாமுகமது, கருணாகரன், விளக்கவுரை நிகழ்த்தினர். மருத்துவர்கள், தங்கராஜ், ராஜசேகரன், புவனேஸ்வரி தேவராஜன், ரமேஷ், விஜய்ஆனந்த், பிரபாகரன், ஸ்ரீதேவி, செல்வராஜ், ராஜேந்திரன், அர்ச்சுணன், பிரகாஷ், முருகானந்தம், ராஜா, செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!