In Perambalur Electricity Board employees who retired in the struggle demanding implement old pension plan
பெரம்பலூரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று காலை ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்கள் 2003 ஆண்டு மின்சார சட்டப்படி பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிக்கொடை, சேவைக்கொடை, வழங்க வேண்டியும், பிடித்தம் செய்யப்பட்ட செய்த தொகையும், நிர்வாகத்தின் பங்களிப்பு தொகையும் வழங்க வேண்டியும், ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த காலத்தையும், பணிக்காலமாக கணக்கில் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பெரம்பலூர் கிளை வட்ட தலைவர் வி.ரெங்கசாமி தலைமை வகித்தார். வட்ட செயலாளர் வி.கணேசன், வட்ட பொருளாளர் பி.முத்துசாமி ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.
சிஐடியு மாவட்ட தலைவர் சிற்றம்பலம், மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி, மின்ஊழியர் மத்திய அமைப்பு வட்ட தலைவர் ரெ.இராஜகுமாரன், வட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின், மற்றும் முருகேசன், பி.கிருஷ்ணசாமி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரையாற்றினார்கள். முடிவில் ராமர் நன்றி கூறினார்.