In Perambalur excessive explosives used in quarries near the houses petition Jerky

பெரம்பலூர் அருகே குவாரிகளில் அளவுக்கு அதிகமாக வேட்டு வைப்பதால் வீடுகள் குலுங்குவதாகவும், பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக எளம்பலூர், செங்குணம், எசனை, கீழக்கரை, வெங்கலம், தொண்டைமாந்துறை, கவுள்பாளையம், கல்பாடி, எறையூர், வேலூர், புதுநடுவலூர், நாட்டார்மங்கலம், நாரணமங்கலம், கூத்தனூர், இரூர், கொட்டாரகுன்று, நெய்க்குப்பை உள்ளிட்ட பகுதிகளில் கல் உடைக்கும் தொழில் பிரதானமாக நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியால் பாறைகளை வெடி வைத்து தகர்க்க அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலான சக்திவாய்ந்த வெடி வைத்து பாறைகளை தகர்ப்பதாக நாட்டர்மங்கலத்தை சேர்ந்த கிராம மக்கள் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதில், அளவுக்கு அதிகமாக சக்தி வாய்ந்த வெடிகளை வைத்து தகர்ப்பதால், வீடுகள் விரிசல் அடைவதாகவும், வீட்டினுள் உள்ள பாத்திரங்கள் அதிர்வுகளால் சத்தமிடுவதாகவும் , இரவு பகலாக வெடி வைப்பதால் எழும் சத்தத்தால் தூங்க முடியவில்லை என்றும், குழந்தைகள் இரவு முழுக்க அழுது கொண்டு இருப்பதாகவும், வெடி வைத்து பாறைகளை தகர்க்கும் போது வீடு வாசல்களில் பாறைத் துண்டுகள் வந்து விழுவதாகவும் புகார் தெரிவித்து இருந்தனர். மேலும், இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!