In Perambalur famous lawyer petition seeking to set up Sales in the tax office
பெரம்பலூர் ஆட்சியரிடம் பிரபல வழக்கறிஞர் ஆர்.பாண்டியன் கொடுத்துள்ள மனுவில் கோரியுள்ளதாவது:
கடந்த 20 ஆணடுகளுக்கு மேலாக அரசாங்கத்தின் முக்கிய வருவாய் அலுவலகமாக செயல்பட்டு வரும் வணிகவரி அலுவலகம் தொடர்ந்து அரியலூரில் செயல்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அரியலூருக்கு, சென்று வர காலதாமதம் ஏற்படுவதோடு, அரசுக்கு சேர வேண்டிய வரி இனங்கள் வணிகர்கள் செலுத்துவதில் வணிகர்களுக்கும், வசூல் செய்யும் அதிகாரிகளும் மாவட்டம் முழுவதும் சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதாகவும்,
மத்திய அரசின் வருமான வரி அலுவலகத்தை போன்று பெரம்பலூரிலும் மாநில அரசின் வணிக வரி அலுவலகத்தை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.