In Perambalur flower seller killed in clashes near the two wheeler!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே நடந்து சென்ற பூ வியாபாரி மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில், சிகிச்சையின் போது உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம், வீரகனூர் அருகே உள்ள திட்டச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பாஞ்சாலி( வயது 60) பூ வியபாரி.இவர் நேற்று ( செப். 5) பூ வியபாரத்தை முடித்துவிட்டு, வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரம் அரசு மருத்துவமனை பகுதியில் பெரம்பலூர் – ஆத்தூர் சாலையில் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சேலம் மாவட்டம் கவர்பனையை சேர்ந்த நல்லுசாமி(57) என்பவர் ஒட்டி வந்த டூ வீலர் எதிர்பாரத விதமாக பாஞ்சாலி மீது மோதியது. இந்த
விபத்தில் பாஞ்சாலி, நல்லுசாமி இருவரும் படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் பாஞ்சாலி சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.