In Perambalur Government Hospital cruelty: dog bite boy asked to the Aadhaar doctors who wander
பெரம்பலூர் அரசு பொது மருத்துவமணையில் நாய்கடியால் பாதிக்கப்பட்ட மிதிலேஷ் என்ற 8 வயது சிறுவனுக்கு ஆதார் அட்டை இருந்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்து அலைகழித்துள்ளனர். சிறுவனின் பெற்றோர்கள் நீங்கள் சிகிச்சை அளியுங்கள் ஆதார் அட்டை வீட்டில் உள்ளது பிறகு எடுத்து வருகிறேன் என்று கூறியதர்க்கு ஆதார் அட்டை நகலை கொடுத்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என இரக்கமற்ற முறையில் கூறியதை அடுத்து சிறுவனின் பெற்றோர்கள் வீட்டிற்கு சென்று ஆதார் அட்டை நகல் எடுத்து வந்து கொடுத்த பிறகே சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.
பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் பாம்பு கடித்தாலும் இதே நிலைதான் என்கின்றனர். நாய்கடிக்கு சரி, பாம்பு கடிப்பட்டவருக்கு ஆதார் அட்டை வரும்வரை விசம் உடம்பில் பரவாமல் உயிர் இருக்குமா? மருத்துவர்களின் இந்த மனிதநேயம் அற்ற செயலால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது ஓய்வு பெற்ற ஓட்டுனர் கிருஷ்ணாபுரம் அரசு மருத்துமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சைக்கு சென்ற அவரும் வீட்டில் இருந்த ஆதார் அட்டையை திரும்பி கொண்டு வந்து கொடுத்தே சிகிச்சை பெற்று உள்ளார்.
சிகிச்சைக்கு ஆதார் அட்டை அவசியம் என்றால் அறிவிப்பு பலகை வைத்தோ அல்லது பத்திரிகை மூலமாகவோ மருத்துவமணை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுருக்க வேண்டியதுதானே? தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தானே தெரியும்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தக்குமார் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆதார் அட்டை கேட்காமல் இருந்தால் நலம்!