In Perambalur in various parts of the district on the night of the earthquake

perambalur_dt_map பெரம்பலுார். (Sep.11) பெரம்பலூர், கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் லேசான நில நடுக்கம் இன்று நள்ளிரவு ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

கடலுார் மாவட்டத்தில் குறிப்பாக திட்டக்குடி மற்றும் வேப்பூர் தாலுகாவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதேபோன்று பெரம்பலுார் மாவட்டத்தில் பெரம்பலூர், பேரளி, சித்தளி, குன்னம், வயலப்பாடி வேப்பூர், அகரம்சீகூர், சர்க்கரை ஆலை எறையூர் பல இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது. சரியாக நள்ளிரவு 1.05 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 5 வினாடிகள் நடந்தது. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் நிலநடுகத்தை நன்கு உணர்ந்ததாக தெரிவித்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு இது இரண்டாவது நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த மேலும், தகவல்கள் வெளியாகவில்லை. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!