In Perambalur insisting on the withdrawal of the central govt unions demonstration vehicle fee hikes
citu-atuo-2017
30 சதவீத வாகன கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி பெரம்பலூரில் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்டோ மற்றும் அனைத்து வகையான ஓட்டுனர் தொழிலாளர் (சிஐடியு) சங்கம் சார்பில் மோட்டார் தொழிலில் 30 சதவீத வாகன கட்டண உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாநிலக்குழு உறுப்பினர் சி.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்திருப்பது மற்றும் அனைத்து வித வாகனங்களுக்கும் காப்பீட்டு தொகை, எப்.சி, பெயர் மாற்றம், காலதாமத கட்டணங்களை, உயர்த்தப்பட்டதை திரும்ப பெறவும், வலியறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனைத்து வித வாகன உரிமையாளர்கள், சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட பொறுப்பாளர்கள் பொது தொழிற்சங்கம் பி.முத்துசாமி, மின் ஊழியர் சங்கம் ஆர்.இராஜகுமாரன், எஸ்.அகஸ்டின், கட்டுமான சங்கம் எ.கணேசன், சாலையோர வியாபாரிகள் சங்கம் பி.ரெங்கராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் எ.ரெங்கநாதன், மாவட்ட தலைவர், பி.பிரகாஷ், பொருளாளர் பி.கனகராஜ், துணைத்தலைவர்கள் மல்லீஸ்குமார், தர்மராஜ், துரைராஜ், பெரியசாமி, மற்றும் தனலட்சுமி கல்லூரிகிளை, சத்திரமனை, தெப்பகுளம், அரணாரை ஆட்டோ ஸ்டாண்டு பாடாலூர், குன்னம் லெப்பைகுடிகாடு, லாடபுரம் கிளை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!