பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்து 673 குடும்ப அட்டைதாரர்கள் (ரேசன் கார்டுகள்) உள்ளன. ஆனால், அங்கு தற்போது அங்கு 3 கடைகள் இயங்கி வருகிறது.
பொருட்களை வினியோகம் செய்ய போதுமான பணியாளர்கள் இல்லாததால், பொருட்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கு போதுமான பணியாளர்கள் இல்லாததால் சுழற்சி முறையில் பொருட்களை வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் பொருட்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதுடன் அந்த மாதம் பெற வேண்டிய பொருட்களை பெற நிலைக்கு தள்ளப்படுகிறன்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கும், வழங்கல் துறையினருக்கும் புகார் தெரிவித்துள்ளனர். பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் காலம் கடந்து வந்ததால் இன்று காலை, கடை எண் 3 உரிய ரேசன்கடையில் வழங்காமல் மற்றொரு கடைக்கு சுழற்சி முறையில் பணிக்கு சென்ற பணியாளரை தடுத்து தங்களுக்கு உரிய பொருட்களை குறித்த நேரத்தில் வழங்க வலியுறுத்தி அந்த கடையை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை முற்றுகை போரட்டம் நடத்தினர்.
இது குறித்து ரேசன் கடை ஊழியர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ விரைந்து கூட்டுறவு, வழங்கல் துறையினர் விரைவில் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து உரிய காலத்தில் பொருட்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தின் பேரில், ஒரு மணி நேரமாக போரட்டம் நடத்திய பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
In Perambalur items at the appropriate time to seek the besieged villagers ration shop staff