In Perambalur ITI at the Government Office Assistant Job
பெரம்பலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மஞ்சுளாதேவி விடுத்துள்ள அறிவிப்பு:
பெரம்பலூர் மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பதவிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு விதிகளின்படி வயதுவரம்பு உள்ளவர்களை கொண்டு பொதுப்பிரிவு ( GENERAL TURN) என்ற இனசுழற்சி அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
1.7.2016 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 18ம், அதிகபட்சமாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்க்கு 35 வயது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 32 வயது, முற்பட்ட வகுப்பினர் 30 வயதிற்கும் மிகாமல் இருக்கவேண்டும்.
எனவே தகுதியானவர்கள் முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், பெரம்பலூர், தண்ணீர்பந்தல், (தந்தை ஹேன்ஸ் ரோவர் கலைக் கல்லூரி பின்புறம்) எளம்பலூர் – 621220 என்ற முகவரிக்கு உரிய கல்விச் சான்றிதழ்களின் நகலுடன் 14.11.2016க்குள் விண்ணப்பம் செய்யலாம்.
இதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு 04328-290590 என்ற தொலைபேசிஎண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.