In Perambalur kallappatti village near the 5 th jallikattu
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் உடும்பியம் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளப்பட்டி கிராமத்தில் தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு வரும் 5ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கடலூர், விழுப்புரம் சேலம் மாவட்டங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்ளும் எனவும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வாடி வாசல் அமைக்கவும், ஆயத்த பணிகளையும் அக்கிராமத்தினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர். காளைகளை அடக்கும் காளையர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு நிகழச்சியை காண ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல், தீயணைப்பு வருவாய், மருத்துவ துறையினரும் தயாராகி வருகின்றனர்.