in Perambalur kandhasasti Brahmmapureeswarar temple in honor Thirukalyaanam

perambalur-surasamkaram-thirukalyanam கந்தசஷ்டியை முன்னிட்டு பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியர், வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூரில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நகர நகை வியாபாரிகள் சங்கம், நகர விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் சார்பில் 39-வது ஆண்டு கந்த சஷ்டி விழா 2 நாளாக நடந்தது.

இதனை முன்னிட்டு, முதல்நாள் சுப்ரமணியசுவாமி சன்னதியில் அபிசேக ஆராதனைகளும், இரவில் சூரசம்கார நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். அதிக அளவில் பெண்கள் பக்தி சிரத்தையுடன் கலந்து கொண்டு சுப்ரமணியசாமி, வள்ளி தெய்வானையை வழிபட்டனர்.

இன்று மாலை 6 மணிக்கு சுப்ரமணிசுவாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதற்காக மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் இருந்து திருக்கல்யாண சீர்வரிசைகள் மேளதாளம் மற்றும் அதிர்வேட்டுகள் முழங்க பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் நகைவியாபாரிகள், தங்கம், வெள்ளி ஆபரண வேலைப்பாடுகள் செய்யும் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், இரவு சுப்ரமணியசாமி திருக்கல்யாண கோலத்துடன் மேளதாளம் முழங்க தேரோடும் வீதிகளின் வழியே சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!