In Perambalur, like government buses, private buses are requested to take action to put disinfectant!

நாடுமுழுவதும் கொரோனோ தடுப்பு நடவடிக்கை தீவிர செயல்படுத்தபட்டு வருகிறது.
தற்போது தமிழகத்தின் மைய மாவட்டமான பெரம்பலூரில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தரை வழி போக்குவரத்து இயக்கப்பட்டு வரும் வேளையில் கொரோனா தடுப்பில் முக்கியமாக முகக்கவசம் அணிவதும், கைகளில் கிருமி பயன் படுத்துவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவை பின்பற்றப்படுவதன் மூலம் தொற்று பரவாமால் இருக்க செய்யப்படுகிறது.

அரசு சில தளர்வுகளை அறிவித்து ஊரடங்கு நீடித்து வரும் வேளையில் பொதுமக்களின் வசதிக்காக பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசால் இயக்கப்படும் பேருந்துகளில், கிருமிநாசினி ஏறும் வழி படிக்கட்டு முகப்பில் பொருத்து பயணிகளே நடத்துனர் உதவி இல்லாமல் கிருமி நாசினி பயன்படுத்தி கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 ரூபாய் கொடுத்தால் சில பேருந்து ஓட்டுனர்களிடம் முகக்கவசத்தையும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், தனியாரால் இயக்கப்படும் நூறுக்கு மேற்பட்ட பேருந்துகளில் கிருமி நாசினி வைக்கப்படாததால் அதில் பயணிக்கும் பயணிகள், ஓட்டுனர், நடத்துனர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதுடன் வேகமாக அதிக மக்களுக்கு பரவும் அபாயமும் உள்ளது. எனவே, அரசு பேருந்துகளை போன்று தனியார் பேருந்துகளிலும் பயணிகளுக்கு கிருமி நாசினியை ஏறும் படிக்கட்டுகளில் வைக்க போக்குவரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரனோ நோய் தொற்றை தடுக்க அரசு பல கோடி ரூபாய்களை செலவு செய்து வருகிறது என்பதோடு அறிவித்த பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட இழப்பில் பலர் வாழ்வதாரத்திற்கு போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!