In Perambalur occupied surround the wall near the road to the school setting are: condemning the protesting students demanding the expulsion of the district administration, whose dizzy

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பள்ளி கூடத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டு வரும் சுற்று சுவர் அமைக்கும் பணியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளிமாணவ, மாணவியர்கள் 7 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு உண்டானது.

perambalur-olaippady

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஓலைப்பாடி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் மாவட்ட
நிர்வாக அனுமதியுடன் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 6 மாத காலமாக தனியார் ஆடை தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட தனியார் ஆடை தயாரிப்பு ஏற்றுமதி நிறுவனம் கட்டிடத்தை சுற்றி பாதுகாப்புக்காக காம்பவுண்ட் சுவர் அமைக்க
திட்டமிட்டு, அதற்கான பூர்வாங்க பணிகளை கடந்த மாதம் 30ந்தேதி தொடங்கியது.

இதனையறிந்த கிராம மக்கள் ஆடை தயாரிப்பு நிறுவனம் சுற்று சுவர்கட்டுவதால் பள்ளிகூடத்திற்கு செல்லும் பாதை துண்டிக்கப்படும் என்று எதிர்ப்பு
தெரிவித்து தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டதோடு, அவ்வழியே வந்த ஒரு அரசுப்பேருந்தை சிறைபிடித்துபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவலறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி
மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வர வழக்கமான பாதையை பயன்படுத்துவார்கள் என்றும், பின்னர் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம்
கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் அதிகாரிகள் கூறியபடி தங்களை அழைத்து பேசி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆத்திரமடைந்த ஓலைப்பாடி கிராம மக்கள்
மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் இன்று அவ்வழியே வந்த இரண்டு அரசுப்பேருந்து, 2 தனியார் கல்லூரி பேருந்து, லாரி,
ஆட்டோ உட்பட 25க்கும் மேற்ப்பட்ட வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த குன்னம் தாசில்தார் ஷாஜஹான், டி.எஸ்.பி.,ஜவஹர்லால், குன்னம் இன்ஸ்பெக்டர் அலாவூதின், சி.இ.ஓ., எலிசபெத், ஏ.இ.ஓ.,ராமதாஸ், லதா, பி.டி.ஓ.,பாரதிதாசன் மற்றும் ஆர்.ஐ.,பத்மாவதி, வி.ஏ.ஓக்கள் அகிலன், கண்ணன் ஆகியோர் உள்ளிட்ட ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால் அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்து போராட்டம் தொடர்ந்து நடந்தது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகள் ஆனந்தி(9),
ஜெயக்கொடி(11), அட்யா(12), கிருத்திகா(10), மனிஷா(8), இந்துமதி((11), கிரிஜா(10) ஆகிய 7 பேரும் மயங்கி விழுந்தனர்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்ட மாணவிகள் 7 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, வேப்பூர் அரசு பொது மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரை சமாதானம் செய்த அதிகாரிகள் தற்போது பயன்படுத்தி வரும் பாதையை தொடர்ந்து பயன்படுத்திடலாம் என அதிகாரிகள் எழுத்து பூர்வமாக உத்தரவாதம் அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் கலைந்து
சென்றனர்.

பள்ளி கூடத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் நடந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்புடன், 4 மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!