In Perambalur pon review of area near the high accident happens siruvachoor
பெரம்பலூர் அருகே அதிக விபத்து நடக்கும் சிறுவாச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போது,
ஏற்கனவே போடப் பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியா முழுமைக்கும் தொடர் சாலை விபத்துக்கள் நடக்கும் இடங்களாகக் கண்ட றியப்பட்டுள்ள 700 பிளாக் ஸ்பாட்களில், தமிழகத்தில் மட்டும் 70 பிளாக் ஸ்பாட் கண்டறியப் பட்டுள்ளன. இப்பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கை மத்திய அரசால் விரைந்து மேற்கொள்ளப்படும்.
சென்னை முதல் செங்கல்பட்டுவரை பறக்கும் சாலைத் திட்டம் கொண்டுவர முடியுமா எனவும் திட்ட மிடப்பட்டு வருகிறது. திண்டிவனம் வரை 6வழிச் சாலை அமைக் கவும், அதுதவிர தேவைப்படும் பகுதி களில் 6வழிச் சாலை கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
நெடுவாசல் போராட்ட குழுவிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் அது ஏற்கனவே கொண் டுவரப்பட்டத் திட்டம். தற்போதைய மோடி அரசால் கொண்டுவரப் பட்டதல்ல எனக்கூறி யதைப் புரிந்துகொண் டும் போராட்டம் தொடர்வது ஏனென்று தெரியவில்லை.
1958லேயே இத்திட்டம் தொடங்க ஏற்பாடானது. 1990லும் அடுத்த கட்டப் பணிகள் நடந்து 2006ல் தான் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் பெறப்படும் 80 சதவீத மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத் திற்கே வழங்கப்படும்.
தனியாருக்கு வழங் கப்படும் 20சதவீத மின்சாரமும் தமிழ் நாட்டுக்குதான் பயன் தரும். இதனால் விவசாயத்திற்கோ நிலத்தடி நீருக்கோ சுற்றுச் சூழலுக்கோ பாதிப்பில்லை. எனவே நெடுவாசல் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு விட்டு மத்தியஅரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது மாவட்டத் தலைவர் சாமி.இளங்கோவன், மாவட்ட பொருளாளர் சாமிநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.ஆர் சந்திரசேகர், குருராஜேஷ், கலைச்செல்வன், சிறுவாச்சூர் ரெங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.