In Perambalur roadblock near public transport impact, condemning them to Delay part of the Bank
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் விரைவாக பண பரிவர்த்தனை செய்ய வேண்டும், பொது மக்களை நீண்ட நேரம் காக்க வைப்பதை கண்டித்து பொதுமக்கள் IOB முன்பு திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் IOB வங்கியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கணக்கு துவங்கி பரிவர்த்தனை செய்து வருகின்றனர். இந்த வங்கியில் கடந்த 8ம் தேதியில் இருந்து, பணப்பரிவர்த்தனை முறையாக நடை பெறவில்லை. ATM இயந்திரங்கள் இயங்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தற்போது கையில் இருந்த பழைய ரூபாய் நோட்டுக்களையும் வங்கியில் டெப்பாசிட் செய்து விட்டு, புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காததால், அன்றாட செலவுகளுக்கு கஷ்டப்படுகிறோம் என்று பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
மேலும் வங்கியில் குறைந்த அளவே பணப்பரிவர்த்தனை செய்யப்படுவதோடு பொது மக்களை திருப்பி அனுப்பி விடுவதால் அதிகாலையில் இருந்து காத்திருந்தும் பயனில்லாமல் போய் விடுவதாக கூறி, வங்கி பணப்பரிவர்த்தனையை சீராக்கி அனைவருக்கும் பணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ATM இயந்திரங்களில் 24 நேரமும் பணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறி வி.களத்தூர் IOB வங்கி முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலிசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.