In Perambalur slipped and fallen into the well near the deer: Fire service dept alive and rescued.

in-perambalur-slipped-and-fallen-into-the-well-near-the-deer-fire-service-dept-alive-and-rescued பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் வனத் துறைக்குச் சொந்தமான காப்பு காடுகளில் ஏராளமான மான்கள் வசிக்கின்றன.

இந்தப் பகுதிகளிலிருந்து குடிநீர் தேடி வனத்தை விட்டு வெளிவரும் மான்கள் வாகனங்கள் மோதியும், தெரு நாய்கள் கடித்தும் உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிப்பாளையம் கிராமத்தில் புகுந்த 2 வயதுள்ள புள்ளிமான், தெரு நாய்கள் துரத்தியதால், மான் அந்த கிராமத்தின் அருகே உள்ள சேர்ந்த ரெங்கசாமி என்பவரின் வயலில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

தகவலறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மானை உயிருடன் மீட்டு, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மான், மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் சித்தளி வனப்பகுதியில் விடப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!