In Perambalur special medical camp held at Government high school
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளயில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.ராமசந்திரன் (குன்னம்) ஆகியோர் பார்வையிட்டனர்.
இச்சிறப்பு மருத்துவ முகாமில் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், கர்ப்பப்பை வாய் பரிசோதனை, சித்த மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, பெண்களுக்கான பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொதுமக்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இம்முகாமில் உடல் குறைபாடுகள் காணப்பட்ட நபர்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகளும், உரிய சிகிச்சையும் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இம்முகாமை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், இம்முகாம் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் மருத்துவ அலுவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் இம்முகாமிற்கு வருகை தந்துள்ள அனைத்து பொதுமக்களுக்கும் தேவையான சிகிச்சைகளையும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்க வேண்டுமென்று மருத்துவர்களிடம் அறிவுறுத்தினர்.
இம்முகாமில் இணை இயக்குநர் மரு. செல்வராஜன், அரசு பொது மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் மரு.ராஜா, சித்த மருத்துவர் மரு.விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.