in Perambalur sugar factory boiler exploded in the tube to stop the cane grinding


பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் பாய்லருக்கு செல்லும் டியூப் வெடித்ததால் கரும்பு அரவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் கரும்பை அறுவடை செய்த விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூரில் இயங்கி வரும் பெரம்பலூர்ர் சர்க்கரை ஆலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் கரும்பு அரவை தொடங்கப்ட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாய்லரில் கோளாறு ஏற்பட்டதால் சில மணி நேரம் கரும்பு அரவை நிறுத்தப்பட்டு அந்த கோளாறு சரிசெய்த பின்பு மீண்டும் கரும்பு அரவை துவக்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென பாய்லரிலருக்கு செல்லும் டியூப் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அந்நேரம் அங்கு ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் விபத்தும், உயிர்சேதமும் தவிர்க்கப்பட்டது.

தொடர்ந்து அடிக்கடி அரவை நிறுத்தப்படுவதால் கரும்பு விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆலைக்கு விவசாயிகள் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர்கள் 4 கிமீட்டர் தூரத்திற்கு சுமார் 100க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் வரிசையாக நிற்கின்றன.

சென்னையில் இருந்து பொறியாளர் வந்தவுடன் இரு தினங்களில் சரிசெய்து மீண்டும் கரும்பு அரவை தொடங்கும் என்றும், மேலும் விவசாயிகள் வெட்டிய அனுப்பிய கரும்புகள் காய்ந்து போகாமல் இருக்க அருகில் உள்ள வேறு ஆலைகளுக்கு அனுப்பி வைப்பட உள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெட்டிய கரும்புகள் டிராக்டர்கள் திரும்ப வராததால் வயலிலேயே காய்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!