in Perambalur test at the temple car festival, devotees participated.
பெரம்பலூர் அருகே கோவில் தேர் வெள்ளோட்ட விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த ஆதிகும்பேஷ்வரர் கோவில் திருத்தேர் வெள்ளோட்ட விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆதிகும்பேஷ்வரர் கோவில் தேர் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டு அதன் வெள்ளோட்ட விழா நடைபெற்றது.
இதில், குன்னம், மூங்கில்பாடி, பெரியம்மாபாளையம், ஒதியம், அந்தூர், அசூர், வரகூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர்.
கோவில் அருகே புறப்பட்ட தேர் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழி யாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதனைத்தொடர்ந்து 5 மாதங்களுக்கு பிறகு தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.
போலீஸ், வருவாய் மற்றும் தீயணைப்புத் துறையினர் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.