In Perambalur, the 21 th National Youth Festival district-level Test

sports-jothi

21வது தேசிய இளைஞர் விழா மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகளை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா தொடங்கி வைத்தார்.

21வது தேசிய இளைஞர் விழா மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (17.11.2016) காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் 150 பேர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாட்டு, ஓரங்க நாடகம் (ஆங்கிலம் அல்லது ஹிந்தி), கர்நாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி சங்கீதம், பேச்சுப் போட்டி, ஹார்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல், வீணை, சிதார், கிடார், தபேலா, மணிப்புரி நடனம், பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக் மற்றும் ஒடிஸி நடனம் ஆகிய நடனப்போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட இசைப்பள்ளி தலைமையாசிரியர் கோ.மா. சிவஞானவதி, தேவார ஆசிரியர் மூ.நடராஜன், மற்றும் நடன ஆசிரியை சி.அனிஸ்ரா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று மாணவ,மாணவியர்களை தேர்வு செய்தனர்.

இப்போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் டிசம்பர் மாதம் மதுரையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தேர்வுப் போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர்.

மாநில அளவிலான தேர்வுப் போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் அரியானா மாநிலம் ரோக்டாக் நகரில் எதிர்வரும் 12.01.2017 முதல் 16.01.2017 வரை நடைபெற உள்ள 21-வது தேசிய இளைஞர் விழா போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!