In Perambalur, the local council elections to win 100 percent of the Consultative Meeting on behalf of MGR forum
பெரம்பலூரில், அதிமுக, வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளரும், ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான அ.தமிழ்மகன் உசேன் தலைமை வகித்தார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் துணைச் செயலாளர் சொரத்தூர் இரா.ராஜேந்திரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.என்.இராசாராம் வரவேற்றார்.
பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.பிக்கள் மருதைராஜா (பெரம்பலூர்), மா.சந்திரகாசி, பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர்.அ.அருணாசலம், உள்ளிட்ட பலர் ஆலோசனை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினர்.
மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் அ.அசோக்ராஜ், மாவட்ட பொருளாளார் பூவை.தா.செழியன், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் என்.கே கர்ணன் (ஆலத்தூர்), என்.சிவப்பிரகாசம் உள்ளிட்ட பல கட்சயின் முக்கிய பிரமுகர்கள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் ஆர்.பூவராகசாமி நன்றி கூறினார்.