In Perambalur the mass counduct (Manu neethi) day camp near the Pennakonam Panchayat : Rs 1 crore 87 lakh 90 thousand 875 beneficiaries were given welfare payments worth.

பெரம்பலூர் அருகே உள்ள பெண்ணகோணம் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் : பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 87 இலட்சத்து 90 ஆயிரத்து 875 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

perambalur-pennkonam

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பெண்ணகோனம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சியில் 449 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 87 இலட்சத்து 90 ஆயிரத்து 875 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், பெண்ணகோனம் ஊராட்சியில் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் தலைமையில் இன்று (13.07.2016) மனுநீதி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் பெண்ணகோனம் கிராம மக்களிடம் சுகாதாரம், நியாயவிலைக்கடை, குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கல்வி, போக்குவரத்து வசதி, 108 அவசர ஊர்தி சேவை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், தாட்கோ திட்டம், புதுவாழ்வுத்திட்டத்தின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு சங்க நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை நேரடியாக அழைத்து அதற்குரிய விபரங்களை கேட்டறிந்து பொது மக்களிடம் எடுத்துக் கூறினார்.

மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கும்போது அதற்கான ஒப்புகைச் சான்றினையும் கட்டாயம் பெற வேண்டும். இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் கிராம நிர்வாக அலுவலகத்தில் தீர்வு தெரிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மா. சந்திரகாசி பேசியதாவது:

தமிழக முதலமைச்சர், மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தின் வளர்ச்சிகாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றார்கள்.

மேலும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்களான விவசாய பெருங்குடி மக்களின் நலவாழ்விற்காக, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளால் வாங்கப்பட்டுள்ள விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து, அதனை முதல் நாளிலே கையெழுத்திட்டு நிறைவேற்றி அதற்கான அரசாணையையும் தற்போது வெளியிட்டு விவசாயிகளின் விடிவெள்ளியாக தமிழக முதலமைச்சர் திகழ்ந்து வருகின்றார்கள்.

தமிழ்நாட்டு மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வழங்கி வரும் முதலமைச்சர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல திட்டங்களை தந்துள்ளார்கள். அத்தகைய திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நிகழ்வாகத்தான் இதுபோன்ற மனுநீதி நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் இதுபோன்ற நிகழச்சிகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என பேசினார்.

இந்நிகழச்சியில் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் பேசியதாவது:

அரசாங்கத்தால் அறிவிக்கப்படுகின்ற அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திலும், என்னென்ன திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களே பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலும் நடத்ப்படுகின்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளையும் வழங்கி அதற்கான தேர்வுகளை பெற்று வருகிறார்கள்.

இந்த மனுநீதி நிறைவுநாள் நிகழ்ச்சியில் 982 மனுக்கள் பெறப்பட்டு அதில் 235 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்களில் 586 மீது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. 161 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்று பெற்ப்பட்டுள்ள மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.1, லட்சத்து 60 ஆயிரத்து 420 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 136 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து88 ஆயிரத்து 577 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வருவாய்த் துறையின் சார்பில் 148 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 27 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 07 ஆயிரத்து 550 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்று திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 17 நபர்களுக்கு ரூ.84 ஆயிரத்து 530 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும்,

மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.58 ஆயிரத்து 290 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் 90 நபர்களுக்கு ரூ.44 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும்,

கூட்டுறவுத் துறையின் சார்பில் 9 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண்மைத்துறையின் மூலம் 4 நபர்களுக்கு ரூ.1,798 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 6 நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 43 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், என மொத்தம் 449 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 87 இலட்சத்து 90 ஆயிரத்து 875 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வழங்கினார்.

இம்முகாமில் அரசு பணியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!