In Perambalur, the Tamil Nadu Power Board Retirement Parents’ Welfare Organization is holding a dharna protest today, insisting on various demands!

பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு, இன்று காலை தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி இன்று தர்ணா போராட்டம் மாவட்டத் தலைவர் டி.எஸ். சம்பத் தலைமையில் நடந்தது. முத்துசாமி உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் ஜி.பஷீர், மாவட்ட செயலாளர் ஆர்.ராஜகுமாரன், மாவட்ட பொருளாளர் எம்.கருணாநிதி ஆகியோர் விளக்கவுரை நிகழ்த்தினர். மாவட்டத்தலைவர் எஸ்.அகஸ்டின், வட்டத் செயலாளர் பன்னீர் செல்வம், சி.ஐ,டி.யூ சாலை போக்குவரத்து எஸ்.சிவானந்தம், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தர்ணா போராட்டத்தில், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறைகளள் பொதுத்துறைகளாக நீடிக்க வேண்டும், மின்வாரியத்தை தனியாருக்கு தார வார்க்க கூடாது, பழைய பென்சன் திட்டத்தை அனைவருக்கும் அமலாக்க வேண்டும், தமிழ்நாடு மின்வாரியத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு, மின்வாரிய ஊழியர்களுக்கு, 3 சதவீதம் ஆண்டுயர்வு வழங்க வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட சி.பி.எஸ். பணத்தை வட்டியுடன் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில், உள்ள குளறுபடிகளை களைய வேண்டும், ஒப்ந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அரசு மற்றும் பொதுத்துறைகளில் காலிப்பணி இடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி நிரந்தரம் பெற்று, முழு ஓய்வூதியம், கிடைக்காதவர்களுக்கு, முழு ஓய்வூதியம் கிடைத்திட வேண்டும், 01.04.2003க்கு பின் பணியில் சேர்ந்து ஓய்வுதியம் பெறாவர்களுக்கு ஓய்வூதியம வழங்க வேண்டும், 12.02.2022 வாரிய உத்தரவு எண் 2-யை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!