பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் பாடாலூரை சேர்ந்த ரவி(40) என்பவர் டயர் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் விற்பனையாளர்கள் சேகர், கோபிநாத் ஆகிய இருவரும் விற்பனையை முடித்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
வழக்கம் போல் இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நான்கு புதிய டயர்கள், 6 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கை ரேகை மற்றும் சி.சி.டிவி பதிவு உள்ளிட்ட தடயங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தில் ஈடுப்ட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு பகலாக மக்கள் நடமாட்டம் உள்ள அப்பகுதியில் நிகழ்ந்த திருட்டு சம்பவம் வியாபாரிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.