பெரம்பலூரில், நாளை மாலை ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

demonstration-clipart-uhuru-hi

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில், நாளை மாலை சுமார் 4 மணி அளவில், ஒடுக்கப்பபட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இதற்கு அந்த இயக்கத்தின், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ப.காமராசு தலைமையில் நடைபெற உள்ளது.

அதில் சாதிய ஆணவக் கொலைகளைக் தடுக்க தனி சட்டம் இயற்றக் கோரியும், தமிழகத்தில் எஸ்.சி, எஸ்.டி மாநில ஆணையம் ஏற்படுத்தக் கோரியும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து, வலுவான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, வலியுறுத்தி ஆர்பாட்டம் நடக்கிறது. மாவட்டத் தலைவரும், வழக்கறிஞருமான சங்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

in Perambalur tomorrow evening banners demanding the demonstration on behalf of the Odukkapatore valvurimai Iyakkam


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!