In Perambalur traditional food festival near kirshnapuram
பெரம்பலூர் : சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் ஒன்றிய அளவிலான பாரம்பரிய உணவுத்திருவிழா
பெரம்பலூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் நடந்தது.
சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்செல்வன் (பெரம்பலூர்), ஆர். இராமசந்திரன் முன்னிலையில் இன்று வேப்பந்தட்டை வட்டம் ஒன்றியம் வெங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் வரகு, குதிரைவாலி, சாமை உள்ளிட்ட பல பாரம்பரிய உணவு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள், காய்கறிகளின் விதைகள், உணவு தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பாராம்பரிய உணவுப்பொருட்கள் பொதுமக்களின் பார;வைக்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும் அவற்றை பயன்படுத்தும் முறைகள் குறித்தும் இவ்விழாவில் விளக்கமளிக்கப்பட்டது.
பெரம்பலூர; மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பாராம்பரிய உணவுப் பொருட்களை சமைப்பதற்கான சமையல் குறிப்புகள் அடங்கிய கையேட்டினை குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராமசந்திரன் வெளியிட பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்செல்வன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட முத்துமீனாள், வெங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் செல்லம்பெரியசாமி, நுகர்வோர் மற்றும் கூட்டுறவு பண்டகசாலை மொத்த விற்பனை சங்கத்தலைவர் கி.இராஜேஸ்வரி, வேப்பந்தட்டை அதிமுக ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், ஒன்றிய கவுன்சிலர் தேவராஜன் மற்றும் ஒன்றிய திட்ட அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.