In Perambalur wizard gundas Law on the Police Activity

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம், நகராட்சி பின்புறம் எம்.எம். நகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி மாந்திரீக வேலைகளில் மந்திரவாதி கார்த்திகேயன் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து வந்த மந்திரவாதி கார்த்திகேயன், பூஜை நடத்தி வந்தார்.

இது தொடர்பாக பெரம்பலூர் போலீசாருக்கு வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி மாந்திரீகம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடுதல், நோய் பரவும் வகையில் இறந்த பெண் உடலை வீட்டில் வைத்திருத்தல் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மந்திரவாதி கார்த்திகேயன், அவரது மனைவி நசீமா உள்பட 6 பேரை கைது செய்து கடந்த சில வாரங்ளுக்கு முன்பு சிறையில் அடைத்தனர்.

மாந்திரீகம் என்ற பெயரில் தொடர்ந்து மோசடி செய்து பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மனித மண்டை ஓடு உள்ளிட்டவற்றை வைத்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாலும் மந்திரவாதி கார்த்திகேயனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் துறை பரிந்துரை செய்தது. அதன் பேரில் கார்த்திகேயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் கார்த்திகேயனிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை பெரம்பலூர் இன்று வழங்கினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!