In Tamil Nadu, 3.5 crore people have benefited from one of Modi’s 192 schemes: BJP leader Annamalai

பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், உதயம் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மத்திய அரசின் திட்டங்களான ஜன்தன், உஜ்வலா உள்ளிட்ட 192 முக்கிய திட்டங்கள் உள்ளது. இதில் ஏதாவது ஒரு திட்டங்கள் மூலம் என 3.50 கோடி தமிழக மக்கள் பயன் பெற்றுள்ளனர். தமிழக மக்களிடத்தில் பாரதிய ஜனதா கட்சி வேறுன்றியுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு முக்கியத்தும் அளித்து வருகிறது.

காவேரியிரிருந்து தண்ணீரை வைத்து தான் தமிழகத்தில் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டுவருகிறது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்பிடி காவேரியிலிருந்து 190 டிஎம்சி தண்ணீருக்கு பதிலாக அதனை குறைத்து 172 டிசிஎம் தண்ணீர் தான் தருகின்றனர். தற்போது மேகத்தாது அணை கட்டி 69 டிஎம்சி தண்ணீர் சேமிக்கவுள்ளோம் என கர்நாடாக அரசு கூறுகிறது. ஆனால் மேகத்தாது அணை கட்டக்கூடாது, தமிழ்நாட்டிற்கு கிடைக்கக்கூடிய ஒரு சொட்டு தண்ணீர் கூட குறைக்கக் கூடாது என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்துகிறது.

மேகத்தாது அணை பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு அளிக்கும். தமிழக மக்கள் நலனுக்காக பாஜக என்றும் துணை நிற்கும். திமுக ஆட்சி வந்தவுடன் பெட்ரோல் , டீசல் விலை ரூ. 5 குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை குறைக்கவில்லை. பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப்படவில்லை.

கச்சா எண்ணைய்யை பொருத்தவரை லிட்டருக்கு ரூ.37 பெட்ரோலுக்கு மாநில அரசுக்கு வரியாக வருகிறது. இந்த வரியை என்ன செய்கின்றனர் என தமிழக அரசு வெள்ளை அளிக்கை தாக்கல் செய்யவேண்டும். பெட்ரோல் , டீசல் விலை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். பேட்டியின்போது மாநில இணை பொருளாளர் சிவசுப்ரமணியம், மாவட்ட தலைவர் சந்திரசேகரன், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர். முன்னதாக பாடாலூரில் அண்ணாமலைக்கு அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!