In the northeast monsoon and reviewed on dengue prevention protection at perambalur

பெரம்பலூர் : வடகிழக்குப் பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்பு குறித்தும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் சட்டடமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், வடகிழக்குப்பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக குறைக்கும் வகையில் மக்களிடையே டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான காரணங்கள் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சாpக்கை நடவடிக்கைகள் குறித்தும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான மக்கள் யாரேனும் இருப்பின் அவா;கள் மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும், விழிப்புணா;வுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்துத்துறை அலுவலர்கள் வாயிலாகவும், கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் டெங்கு விழிப்புணர்வு பயண நிகழ்ச்சிகள் வாயிலாகவும் வீடுவீடாக டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 74 நீர்நிலைகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 136 நீர்நிலைகளும் உள்ளது.

இதில் 4 நீர்நிலைகள் 75 சதவீதத்திற்கு மேல் கொள்ளளவை எட்டியுள்ளது. 5 நீர்நிலைகள் 50 முதல் 75 சதவீதம் வரை கொள்ளளவை எட்டியுள்ளது. மீதமுள்ள 201 நீர் நிலைகள் 50 சதவீதத்திற்கு குறைவான நீரைக்கொண்டுள்ளது.

மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கத்தேவையான இடங்களும், அவர்களை பத்திரமாக அழைத்துச்செல்லவும், பாதிக்கப்பட்ட இடங்களுக்குச்சென்று தேவையான முதலுதவிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் தேவையான அளவு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை நீரில் அழைத்துவர பிளாஸ்டிக் படகுகளும், மரங்கள் விழுந்தால் அவற்றை அறுத்து அப்புறப்படுத்த தேவையான இயந்திரங்களும், மணல் மூட்டைகளும் தயார் நிலையில் உள்ளது.

அதுமட்டுமல்லாது 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியரகத்தில் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் மழைக்காலங்களில் தங்கள் பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இலவச தொலைபேசி எண்களான 1077 மற்றும் 18004254556 என்ற எண்களில் தொடர;பு கொண்டு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் திட்ட இயக்குநா; (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மனோகரன், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.செல்வராஜன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சம்பத், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாலன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!