In the point-of-sale to Perambalur cooperative fertilizer outlets Machines provied
தமிழக அளவில் முதற்கட்டமாக, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் மானிய விலையில் விற்கப்படும் உர மூட்டைகள் முறைகேடின்றி ஆதார் அட்டைகள் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்வதற்கு ரூ. 90 லட்ச ரூபாய் மதிப்பிலான 50 (ஸ்வைப்) பாயிண்ட் ஆஃப் சேல் மிஷின்கள் வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் 53 கூட்டுறவு கடன் சங்கங்கள் 170 தனியார் விற்பனையாளர்கள் என மொத்தம் 223 உர விற்பனை நிறுவனங்கள் உள்ளன.
இதில் 50 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு முதல் கட்டமாக விற்பனை முனையக் கருவிகள் வரப்பெற்றுள்ளன. ரூ.18,000 மதிப்புடைய இக்கருவிகளை கிரிப்கோ உர நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது.
இந்தக் கருவி மூலம் விவசாயிகள், அரசு அறிவித்துள்ள சரியான விலைக்கு உரங்களை பெற்றுப் பயனடையலாம்.
ஆதார் அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு உரங்கள் விற்பனை செய்யப்படுவதால், விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு உரங்கள் செல்வது முழுமையாக தடுக்கப்படுகிறது.
மேலும், விவசாயிகள் சரிவிகித முறையில் உரமிடுவதும், பயிர் தேவையின் அடிப்படையில் உரங்கள் பெறுவதும் உறுதி செய்யப்படும். மேலும் ஆகஸ்ட் -2017 முதல் டிசம்பா; -2017 வரை இத்திட்டமானது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது.
01.01.2018 முதல் விவசாயிகள் தங்களது மண் வள அட்டையின் அடிப்படையில் வாங்கும் உரங்களுக்கு உரிய மான்யம் நேரடியாக விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறும்.
இதில் மிசினை கையாளுவது, விற்பனை செய்வது, உரங்கள் கொள்முதல், விற்பனை, இருப்பு மற்றும் விவாசயிகளின் ஆதார் கார்டுகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை அதிகாரிகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், விற்பனையாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள், இணை இயக்குனர் ஆர்.சுதர்சன், மண்டல இணைப்பதிவாளர் மா.பெரியசாமி, சரக இணைப்பதிவாளர் பாண்டித்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.