India makkal munettra kalagam Launches In Perambalur
பெரம்பலூரில் இந்திய தொழிலாளர் மக்கள் முன்னேற்றக் கழகம் துவக்க விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
விழாவிற்கு தலைமை வகித்த கட்சியின் நிறுவனரும், தலைவருமான பி.ஆர். ஈஸ்வரன், கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசினார். மாநில மகளிரணி தலைவி ஈ. சுகந்தி, குத்து விளக்கேற்றி கட்சியை தொடக்கி வைத்தார்.
மருத்துவர் கோசிபா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பி. தயாளன், வழக்குரைஞர் ஆர்.ஆர். பாஸ்கர், சமூக ஆர்வலர் வி. பாலமுருகன் ஆகியோர் பேசினர்.
இதில், பொதுமக்கள், தொழிலாளர்களின் நலன்களும், அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க போராட்டம் நடத்துவது. விவசாயிகளுக்கு உர மானியம், பயிர் காப்பீடு, பாரம்பரிய விதைகள், கிணறு வெட்டுதல், நீர் ஆதாரம் ஏற்படுத்துதல், ஆழ்துளை கிணறு அமைத்தல், நீர்வழித் தடம் ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவுக்கு, அவைத்தலைவர் எம். முத்துக்குமார், மாவட்டத் தலைவர் சி. சின்னதுரை, திருச்சி மண்டல செயலர் ஆர். வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கொள்கை பரப்பு செயலர் வி. வீரபாண்டியன், ஆலோசகர் ஏ.பி. ராஜேந்திரன், பொருளாளர் சி.ஜி. பழனிசாமி, துணைத்தலைவர் என். குணசேகரன், மாநில மகளிரணி செயலர் ஒய். நஜ்மாபேகம், இளைஞரணி தலைவர் எம். ராமஜெயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டச் செயலர் வி. சரவணன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் வி. கோவிந்தராஜ் நன்றி கூறினார்.