Interested students can apply to study specialist staying in the sports hotels

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் விடுதுள்ள தகவல் :

தமிழக அரசு விளையாட்டு; துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விஞ்ஞான ரீதியான நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மாணவர்களுக்காக சென்னை நேரு விளையாட்டரங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி ஆகிய இடங்களிலும், மாணவியர்களுக்காக சென்னை நேரு உள்விளையாட்டரங்கிலும் செயல்பட்டு வருகிறது.

மேற்காணும், சிறப்பு விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பயிலும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.

மேலும், தனிப் போட்டி பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் மாநில, அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில், அங்கீகரிக்கப்பட்ட கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் (SGFI), கழகங்கள், தேசிய விளையாட்டுப் போட்டிகள், RGKA நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

குழுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது மாநில அளவில் தோ;வு பெற்று தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப்பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு (SGFI)கழகங்கள், தேசிய விளையாட்டுப்; போட்டிகள், ஊரக விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கையுந்துப்பந்து விளையாட்டில் 185 செ.மீ-க்கு மேல் உயரமுள்ள மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் மாணவர்களுக்கு தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்துப்பந்து, பளுதூக்குதல், ஜுடோ, இறகுப்பந்து மற்றும் ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளும், மாணவியர்களுக்கு தடகளம், குத்துச்சண்டை, கையுந்தப்பந்து, கால்பந்து, மற்றும் ஜுடோ ஆகிய விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கான மாநில அளவிலான தேர்வு 18.04.2017 அன்று சென்னை ஜவர்ஹலால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவியர்கள் 18.04.2017 அன்று காலை 8.00 மணிக்குள் சென்னை ஜவர்ஹலால் நேரு விளையாட்டரங்கில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் அதற்கான உரிய படிவங்களை 10.04.2017-ஆம் தேதி முதல் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை அணுகி இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2017-2018-ம் வருட சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்திடவும், விளையாட்டு விடுதி சார்பான விவரங்களை www.sdat.tn.gov.in , என்ற இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேலாளர், சிறப்பு விளையாட்டு விடுதி, ஜவர்ஹலால் நேரு விளையாட்டரங்கம், பெரியமேடு, சென்னை-600 003 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 18.04.2017 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!