International Kongu of Tamil Conference in Namakkal is a consultative meeting on Bhoomi Puja
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சர்வதேச கொங்கு தமிழர் மாநாடு நாமக்கல்லில் வருகிற 2019ம் ஆண்டு பிப். 3-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிற 22ம் தேதி மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெறுகிறது.
இது தொடர்பான கொமதேக நிர்வாகிள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநாட்டு செயலாளர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார்.
மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்னுவேல், துணை பொதுச்செயலாளர் தங்கவேல், வர்த்தகர் அணி செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருகிற 22-ந் தேதி நாமக்கல்லில் 2வது சர்வதேச கொங்கு தமிழர் மாநாட்டின் மேடை அமைப்பிற்கான பூமிபூஜை நிகழ்ச்சியை கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலும், பேரவையின் தலைவர் தேவராஜன் முன்னிலையிலும் நடத்துவது எனவும், இதில் கட்சியினர் திரளாக கலந்து கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநாட்டு தலைவர் நதி ராஜவேல், நிதிக்குழு செயலாளர் துரை, துணைத் தலைவர் சந்திரசேகர், துணை செயலாளர் பூபதி, பொருளாளர் மணி, மத்திய மண்டல இளைஞர் அணி செயலாளர் செந்தில் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.