Interview with a temporary teacher and staff at Kendriya Vidyalaya; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூரில் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பகுதிநேர, தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு மார்ச் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

ஹிந்தி, வேதியியல் கணினி அறிவியல் பாடங்களில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கும், சமூக அறிவியல், வரலாறு, புவியியல், உயிரியல், ஆங்கிலம் இந்தி சமஸ்கிருதம் கணிதம் ஆகிய பாடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கும் ஆங்கிலம் கணிதம், சமூக அறிவியல், ஹிந்தி ஆகிய பாடங்களில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கும் மற்றும் உடற்கல்வி / யோகா பயிற்சியாளர், மருத்துவர், செவிலியர், மனநல ஆலோசகர், இசை, நடனம், ஓவியம் மற்றும் கைவினை பயிற்சியாளர்கள், தமிழ் ஆசிரியர், கணினி பயிற்றுனர், அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்கான டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஆண் பெண் உதவியாளர்கள், செக்யூரிடி ஆகிய அனைத்து பணிகளுக்கும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.

எழுத்துத் தேர்வு நேர்காணல் மற்றும் செயல்முறை தேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு ஆண்டு வரை பட்டியலில் வைக்கப்படுவர். காலிப்பணியிடத்திற்கான வாய்ப்பு ஏற்படும் பொழுது, தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி வாய்ப்பு தற்காலிகமாக வழங்கப்படும். இத்தகைய தற்காலிக வேலைவாய்ப்பு குறித்த அனைத்து விவரங்களையும் பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் www.perambalur.kvs.ac.in இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறன், புதிய கல்விக் கொள்கை குறித்த அடிப்படை அறிவு, கம்ப்யூட்டர் சார்ந்த பயிற்றும் திறன், டைப்பிங் போன்ற திறமை உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!