is not feasible to attempt to implement Article 9 of the offset cancellation the order focal demonstrated to demand the teachers union.
நடைமுறைக்கு சாத்தியமில்லாத சார்நிலைப் பணிகள் விதி 9-யை அமுல்படுத்த முயற்சிக்கும் அறிவிப்பானையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் இன்று மாலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமையில் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செய்லாளர் கமலக்கண்ணன், பொருளாளர் மணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநில பொருளாளர் மகேந்திரன் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில், 6வது முறையாக வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளை தெரிவித்து கொள்வது,
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு எதிராக உள்ள தடை ஆணையை நீக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து அனைத்து ஆசிரியர்களுக்கும், நடக்கும் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்,
பள்ளிக் கல்வி, மேல்நிலைக் கல்வி, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிலிருந்து முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்கு எதிராக வழக்கு நடைபெற்று வேளையில், ஒரு சில சங்கங்களின் வற்புறுத்தலின் பேரில், நடைமுறைக்கு சாத்தியமில்லாத சார்நிலைப் பணிகள் விதி 9-யை அமுல்படுத்த அனுப்பி ஆணையை ரத்து செய்யக் கோரியும்,
அனைத்து ஆசிரியர்களுக்கான பணிபாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும் அரசாணை 720 -யை எவவித மாற்றமோ, திருத்தமோ செய்யாமல், தற்போது நடையில் இருப்பதை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்,
2004 – 2006 ஆண்டுகளில், பணி அமர்த்தப்பட்ட ஆசிரியகளுக்கு பணியேற்ற நாளில் இருந்து பணிவரன்முறை செய்து பணப்பலன் அளித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாநிலத் துணைத் தலைவர் தில்லைநடராஜன் நன்றி கூறினார்.