It is better to get a In Perambalur the Chief Minister, the MLA Thamilselvan prayer on behalf of the women’s kuttuvilakku pooja
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி பெரம்பலூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரம்பலூர் எம்.எல்.ஏவும், அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பரிபூரண நலம் பெற வேண்டி குத்துவிளக்கு பூஜை நடத்தி வழிபட்டு வேண்டிக் கொண்டனர்.
இதில், அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன், உள்ளிட்ட கட்சியை பல்வேறு முக்கிய பிரமுகர்கள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.