J. Death: judicial inquiry in the hunger strike, demanding in perambalur
பெரம்பலூர் : ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கோரி ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் என்ன நடந்தது என்பதை அறிய, உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நீதி விசாரணை நடத்தவேண்டும் என வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தினுள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தீபா பேரவையை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமான தொண்டர்கள், முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.